ஊர்வலங்கள், திருவிழாக்கள் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்கள் ,விளையாட்டு பிரபலங்கள் மத்திய அமைச்சர்கள், அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.ஆனால் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி மேற்கொண்ட ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.ஆனால் ஒருவேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், ஏப்ரல் மாதத்தில் எந்தவொரு விழாவுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.இந்த சமயத்தில் சமூக/மத கூட்டங்கள், ஊர்வலங்கள், திருவிழாக்கள் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…