கருப்பு பூஞ்சை தொற்று நோயை குணப்படுத்தக் கூடிய அம்போட்டெரிசின் பி எனும் மருந்து விலை ஆயிரத்து 1,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிற 31-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு அடுத்த மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் இந்த கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருவதுடன், பலர் உயிரிழக்கவும் செய்கின்றனர்.
இந்நிலையில் கருப்பு பூஞ்சையை குணப்படுத்த அம்போட்டெரிசின் பி எனும் மருந்து தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மருந்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வர்தா ஜெனிடிக் லைப் சைன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மருந்தின் விலை தற்போது 1200 ரூபாய் என கூறப்பட்டுள்ளதுடன், இந்த மருந்து விநியோகம் வருகிற திங்கட்கிழமை அதாவது மே 31 முதல் தொடங்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களில் அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து முதல்கட்டமாக மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவதாகவும், அடுத்தபடியாக அதிக அளவில் கருப்பு பூஞ்சை தொற்று உள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. கேரளா, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சை தொற்று ஆங்காங்கு காணப்படும் நிலையில் அங்கும் அடுத்த கட்டமாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…