மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால், ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,121 ஆக உள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று முதல் கடைகள் கூடுதலாக 2 மணி நேரம் இயங்க அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , கடைகளில் கூட்டத்தை குறைக்க கூடுதலாக 2 மணி நேரம் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்து வைத்திருக்கலாம். மும்பை , புனே, சோலாப்பூர், அவுரங்காபாத், மாலேகாவ், நாசிக், துலே, ஜல்காவ், அகோலா, அமராவதி மற்றும் நாக்பூர் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகள் ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்பட வேண்டும்.
மாநிலத்தின் மற்ற பகுதிகளில் கடைகள் 7 நாட்களும் திறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…