Assam-Meghalaya Border [File Image ]
அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய கிராமத்தில் இரு தரப்பினருக்கும் இடையே புதிய மோதல் வெடித்துள்ளது.
மேகாலயா மாநிலம் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்திற்கும் அசாம் மாநிலம் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்திற்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள லபாங்கப் கிராமத்தில் இரு தரப்பினரும் வில் அம்புகளை பயன்படுத்தி ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் எந்தவித உயர் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைராலகி வருகிறது. இரு மாநில எல்லை காவல்துறையினரும் சம்பவ இடத்திற்குச் விரைந்த நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது, மோதல் நடந்த இடத்தில் கிராம மக்கள் ஒன்று கூடுவதை இரு மாநில போலீசாரும் கண்காணித்து வரும் நிலையில், இன்று காலை நிலைமை அமைதியாக மாறியுள்ளது, இருந்தாலும் சம்பவ நடந்த இடத்தில பதற்றமான் சூழ்நிலை நிலவி வருகிறது.
முன்னதாக, இதே போல் ஒரு சம்பவத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதாவது, அசாம் – மேகாலயா மாநிலங்களுக்கு இடையேயான எல்லையின் சர்ச்சைக்குரிய பகுதியில் முக்ரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஐந்து மேகாலயா உள்ளூர் கிராம வாசிகள் மற்றும் அசாமைச் சேர்ந்த ஒரு வனக் காவலர் உட்பட மொத்தம் ஆறு பேர் உயிரிழந்தனர்.
இப்படி, இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் அடிக்கடி மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரு மாநில முதல்வர்கள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக அடுத்த மாத தொடக்கத்தில் ஒரு சந்திப்பை நடத்த உள்ளனர்.
கடந்த ஆண்டு, அசாம் – மேகாலயா இடையே வேறுபாடு உள்ள கிராமங்களில் 6 பிரிவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…
சென்னை : மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…
சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…
லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…