Categories: இந்தியா

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை..! குவகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Published by
செந்தில்குமார்

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து குவகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் தொந்தரவு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் WFI தலைவர் பிரிஜ் பூஷன், கடந்த மார்ச் மாதத்துடன் தனது மூன்றாவது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், WFI தலைவர் தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விளையாட்டு அமைச்சகம் அதனை செல்லாது என அறிவித்தது.

பிறகு இந்திய மல்யுத்த சம்மேளன விவகாரங்களை சமாளிப்பதற்கும், 45 நாட்களுக்குள் புதிய தேர்தல்களை நடத்துவதற்கும் இரண்டு உறுப்பினர் அடங்கிய குழுவை நியமித்தது. இதனையடுத்து, தேர்தல் வரும் ஜூலை 4ம் தேதி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம்(IOC) அறிவித்தது.

அதன்பின், தேர்தலை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், அஸ்ஸாம் மல்யுத்த சங்கம், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிக அமைப்பு மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு எதிராக தாக்கல் செய்த மனுவின் பேரில் மல்யுத்த  சம்மேளன தேர்தலுக்கு குவகாத்தி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், WFI தற்காலிக அமைப்பு மற்றும் விளையாட்டு அமைச்சகம், விசாரணைக்கு அடுத்த தேதி நிர்ணயிக்கப்படும் வரை WFI இன் இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலை நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கை ஜூலை 17ம் தேதிக்கு குவகாத்தி நீதிமன்றம் ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
செந்தில்குமார்

Recent Posts

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

8 minutes ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

24 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

38 minutes ago

அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…

60 minutes ago

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

14 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

14 hours ago