பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் இஸ்லாமிய மதம் குறித்தும், முகமது நபி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைத்தளத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டார். இதனால், நவீனுக்கு எதிராக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 11-ம் தேதி 100-க்கும் மேற்பட்டோர் பெங்களூர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், நவீனுக்கு எதிராக சீனிவாசமூர்த்தியின் வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டு கலவரம் நடைபெற்றது.
டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் எல்லையில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் கூடுதல் காவல் ஆணையர் உட்பட 60 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
வன்முறைக்கு அடுத்த நாள் 145 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து வன்முறை தொடர்பாக இரண்டு நாள்களுக்கு முன் மேலும் 60 பேரை கைது செய்தனர். இந்நிலையில், தற்போது இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…