எல்லை விவகாரம்.! இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை.!

Published by
murugan

லடாக்கில் இந்தியா- சீனா கமாண்டர்கள் நிலையிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 10:30 மணிக்கு சுஷூலில் நடைபெறுகிறது.

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன இராணுவ வீரர்களுக்குக்கிடையில் கடந்த 15 -ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

இதனால், இரு நாடுகளுக்கும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த  பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிகள் நடந்து வருகிறது. அதன்படி, அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையில்  முடிவு எட்டப்படாத நிலையில், இருநாட்டு ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ஜூன் 6-ம் தேதி நடந்த முதல் கூட்டத்தில், இரு தரப்பினரும் எல்லையில் வெளியேற ஒப்புக் கொண்டனர். பின்னர், ஜூன் 22 அன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாக இரு நாடுகள் தரப்பிலும் கூறப்பட்டது.

இந்நிலையில், லடாக்கில் இந்தியா- சீனா கமாண்டர்கள் அளவிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 10:30 மணிக்கு சுஷூலில் நடைபெறுகிறது. கடைசி  நடைபெற்ற இரண்டு பேச்சுவார்த்தையும்  சீனப் பக்கத்தில் உள்ள மோல்டோவில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கவின் கொலை வழக்கு : சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் சஸ்பெண்ட்!

கவின் கொலை வழக்கு : சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் சஸ்பெண்ட்!

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

35 minutes ago

பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில் போர் நிறுத்தம் – அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…

1 hour ago

விஜய் தலைமையில் நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

பிரதமர் கிட்ட நான் பேசிய பிறகு தான் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தப்பட்டது – இபிஎஸ் எச்சரிக்கை!

திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…

3 hours ago

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

5 hours ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

5 hours ago