காற்று மாசை தடுக்கும் வண்ணம் சில கட்டுப்பாடுகளை விதித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி : சமீப நாட்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 471 ஒன்றாக பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காற்று மாசுபாடு குறித்து, சமூக ஆர்வலர் ஆதித்ய துபே மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். காற்று மாசு தடுக்க டெல்லியில் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், காற்று மாசு அதிகரித்திருப்பதை அவசரகால நிலை என்று கூறலாம். கடந்த 7 நாட்களில் எவ்வளவு பட்டாசுகள் வெடிக்க பட்டது என்பதை கவனித்தீர்களா? பொதுமக்கள் வீடுகளுக்குள் கூட மாஸ்க் அணிந்து செயல்படும் அளவிற்கு மிக மோசமான நிலையில் காற்றின் தரம் உள்ளது. எனவே அரசு உடனடியாக காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின், சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…