சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு ராணுவம் விமானம் மூலம் அனுப்பப்பட்ட 13 இராணுவ வீரர்களின் உடல்கள் டெல்லி கொண்டு வரப்பட்டன.
இன்று மாலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு ராணுவம் விமானம் மூலம் முப்படை தலைமை தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேரின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு வரப்பட்டன.
இதைத்தொடர்ந்து இரவு 8:30 மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தொடங்க உள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தளபதிகள் நேரடியாக 9 மணி அளவில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் 4 பேரின் உடல்கள் மட்டும் அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக அனுப்பப்படவுள்ளதாகவும், மற்ற வீரர்களின் உடல்கள் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…