காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார். அதில், லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று தனக்கு உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே, ராகுல் காந்தி மேற்கு வங்கம் சென்று ஒரு நாள் முழுவதும் தொடர்ச்சியாக பரப்புரையில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரையை கைவிட்டுள்ளேன் என்றும் இதை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் ராகுல் காந்திக்கும் கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தேவையான மருத்துவ வசதிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியா முழுவதும் உள்ள 650…
சென்னை : இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு காணொலி…
சென்னை : தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் மொத்தமாக எவ்வளவு கோடி இலாபம் ஈட்டியுள்ளது என்பதற்கான விவரத்தை…
டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர்…