தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில்,தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்குநாடு உருவாக்கப்படும் என்ற சர்ச்சை கிளம்பி அரசியல் கட்சிகள் மத்தியில் பல எதிர்ப்புகள் உருவாயின.
இந்நிலையில்,தமிழ்நாட்டை பிரிக்கும் ஏதேனும் திட்டம் இருக்கிறதா?,இதன் உண்மைத்தன்மை என்ன? என்று மக்களவை எம்பிக்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் எழுத்து பூர்வமாக முன்வைத்த கேள்வி எழுப்பினர்.
இதற்கு,பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்,தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போது பரிசீலனையில் இல்லை.மேலும்,கொங்குநாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்குவது தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்று தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
மத்திய அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளதால்,தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…