#BREAKING: மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு!

ஜூலை 22ம் தேதி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்குகிறது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 20ம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஜூலை 20 – செப். 30ம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெறும். எம்.பி.பி.எஸ் ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 27, 28ம் தேதி ஆன்லைனில் நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 16, 17ம் தேதிகளில் நடத்தப்பட்டு ஆகஸ்ட் 18ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 3ம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 6, 7ம் தேதிகளில் நடத்தப்பட்டு செப்டம்பர் 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும், வரும் 16-ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில மருத்துவ கல்லூரிகளுக்கும் 15% இடங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், சேர்க்கை மையங்கள் வாயிலாகவும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர இதுவரை 40,193 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு தேதியை விரைவில் மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
