[File Image]
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாள் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி அரசு சார்பில் தலைமை பொதுப்பணித்துறை பொறியாளர் பழனியப்பன் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் புதுச்சேரி, கேரளா, கர்நாடக மாநில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த அவசர மனு மீது காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க இயலாது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய அணைகளில் போதுமான நீர் இல்லாததால் தமிழகத்திற்கு நீர் திறப்பது இயலாத செயல். மழைப்பொழிவுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் தமிழ்நாடு கேட்கும் அளவுக்கு தண்ணீர் தர இயலாது. தமிழ்நாடு கேட்கும் நீரை கொடுத்தால் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும், கர்நாடகத்தின் நான்கு முக்கிய அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லை, 47 சதவீதம் அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் கர்நாடக அரசு விளக்கம் அளித்து இருந்தது.
இந்த நிலையில், காவிரியில் இருந்து 15 நாட்கள் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்த நிலையில், செப்.12-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 10 நாட்களுக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…