MODI AND Priyanka Gandhi [Image source : file image ]
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடைந்தது.
கர்நாடகா மாநிலத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம், உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்று கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், அனைத்து கட்சியில் இருந்த முக்கிய தலைவர்கள் பலரும் கர்நாடகாவில் இருந்த பல இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வந்தனர். பிரதமர் மோடி, ஜேபி நட்டா, அமித்ஷா, ஆகியோர் பாஜக சார்பில் தீவீர பிரச்சாரம் செய்தனர்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளியோர் காங்கிரஸ் சார்பில் தீவிர பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தின் 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று 6 மணியுடன் முடிவடைந்தது.
மேலும், அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10- தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 224 தொகுதிகளில் கொண்ட இந்தத் தீர்த்தத்தில் 2,615 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகள் வரும் மே 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…