Categories: இந்தியா

சந்திராயன்-3 விண்கலம் செப்டம்பரில் விண்ணில் ஏவப்படும்..! இஸ்ரோ இணைஇயக்குநர் எஸ்.வி.சர்மா..!

Published by
செந்தில்குமார்

சந்திராயன்-3 செயற்கைக் கோளை செப்டம்பரில் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ இணைஇயக்குநர் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) சந்திரனில் ஆய்வு செய்ய, விண்ணில் செலுத்தப்பட உள்ள 3-வது விண்கலம் ஆகும். சந்திரயான்-2 போலவே சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கி தகவல்களை அனுப்பும் திறனை வெளிப்படுத்தும். இது லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் (SHAR) உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையதிலிருந்து (SDSC) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சந்திராயன்-3 செயற்கைக் கோள் திட்டப் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும், சந்திராயன்-3 செயற்கைக்கோளை வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ இணை இயக்குனர் எஸ்.வி.சர்மா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சந்திரனுக்கு இந்தியாவின் முதல் பயணமாக சந்திராயன் 1 என்ற விண்கலம், அக்டோபர் 22, 2008ம் ஆண்டிலும், இரண்டாவது பயணமாக சந்திராயன் 2 என்ற விண்கலம் 22ம் தேதி ஜூலை 2019ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையதிலிருந்து (SDSC) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

7 minutes ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

30 minutes ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

1 hour ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

2 hours ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

2 hours ago

கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago