திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!
நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்கிய ஆர்ச்சர், 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார்.

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்கள் எடுத்தது. இப்பொழுது, இந்திய அணி பேட்டிங் செய்ய வந்தபோது, ஆர்ச்சர் மிரட்டலாக பவுலிங் செய்து ஜெய்ஸ்வாலை அவுட்டாக்கினார்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பி, 3வது பந்திலேயே விக்கெட் எடுத்தார் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். ஆர்ச்சர் வீசிய பந்தில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஹாரி ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
ஆர்ச்சரின் பந்து வீச்சில் 8 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 13 ரன்கள் எடுத்த பிறகு பெவிலியன் திரும்ப அனுப்பப்பட்டார். இதன் முலம், 4 ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்குத் திரும்பி 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து மிரட்டல் காம்பேக் கொடுத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். சொல்லப்போனால், கடந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு ஆர்ச்சர் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். முன்னதாக, 2021 பிப்ரவரி 24ல் இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் ஆர்ச்சர் விளையாடியிருந்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அவுட் செய்த பிறகு, ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடினார். அவர் உணர்ச்சிவசப்பட்ட ஒரு கடுமையான கர்ஜனையை வெளிப்படுத்தினார். பின்னர் தனது அணியினருடன் சேர்ந்து ஒரு உற்சாகமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.அவரது சக வீரர்கள் அவருக்கு ஆரவாரங்களுடன் வாழ்த்து தெரிவித்தனர். ஆர்ச்சரின் கொண்டாட்ட வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.
Edged… And carried!
JOFRA IS BACK! 🌪️ pic.twitter.com/xr0hgYtP72
— England Cricket (@englandcricket) July 11, 2025