Categories: இந்தியா

Chandrayaan3: ஜூலை 14 பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்..! பிரதமர் மோடி ட்வீட்.!

Published by
செந்தில்குமார்

ஜூலை 14ம் தேதி பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திராயன்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தை நோக்கி இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சந்திராயன்-3 செலுத்தப்பட உள்ளது.

இதற்கான 25 மணிநேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இதற்கிடையில், இன்று விண்ணில் செலுத்தப்படும் சந்திராயன்-3 விண்கலத்தை சுமந்துசெல்லும் LVM-3 ராக்கெட்டிற்கான திரவ எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக்கட்ட சோதனையும் நிறைவுற்றதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் விண்வெளித் துறையைப் பொறுத்த வரையில் 14 ஜூலை 2023 எப்பொழுதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சந்திரயான்-3 நமது மூன்றாவது சந்திரப் பயணத்தைத் தொடங்கும். இந்த குறிப்பிடத்தக்க பணி நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

1 hour ago

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…

2 hours ago

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

3 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

4 hours ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

5 hours ago