மல்லிகார்ஜுன கார்கேவை கொலை செய்ய சதி – காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

Mallikarjun Kharge

மல்லிகார்ஜுன கார்கேவைக் கொல்ல பாஜக செய்ய சதி செய்ததாக காங்கிரஸ் பரப்பரப்பு குற்றச்சாட்டு.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக தலைவர்கள் சதித்திட்டம் தீட்டுவதாக காங்கிரஸ் எம்பி ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார். சித்தாபூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் மற்றும் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடலின் ஆடியோ கிளிப்பை ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டார்.

அதில், கர்நாடகாவின் சித்தப்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், “கார்கேவின் குடும்பத்தை அழிப்பேன்” என்று கூறியுள்ளதாக ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வாய்ப்புகளால் பாஜக பயமுறுத்தப்படுவதாகவும், பாஜக தலைமை “ஏஐசிசி தலைவரைக் கொல்ல சதி” தீட்டியுள்ளதாகவும் சுர்ஜேவாலா கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையின் ‘நீலக்கண்கள் கொண்ட பையன்’ ரத்தோட்டின் ஆடியோ பதிவில் இருந்து இது தெளிவாகிறது என தெரிவித்து, பாஜகவினர் பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோ கிளிப் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா. சித்தாபூர் தொகுதியில் பாஜக தலைவர், மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்