Categories: இந்தியா

தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் நிதி பெறும் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறுவதற்கு வழிவகுத்துள்ளது. அதாவது, அரசியல் கட்சிகள் நன்கொடை பெற உதவும் தேர்தல் பத்திரங்கள் நிதி சட்டம், கடந்த 2017 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன.

ரிசர்வ் வங்கிச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் திருத்தி இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் தேர்தல் நிதி வழங்குவதற்கான தேர்தல் பத்திரங்களை வெளியிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நிதி மசோதாவாகத்த தாக்கல் செய்யப்பட்டதால் நாடாளுமன்ற மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது.

இது சட்டவிரோதம் என்றும் இந்த சட்டத்தில் உள்ள சரத்துகள் பலவும் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நீண்ட நாட்களாக விசாரிக்கப்படாமலேயே இருந்து வந்தது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் வழக்கினை விசாரிக்க கோரிக்கை வைத்தபோது, தற்போதைக்கு தேர்தல் எதுவும் இல்லை, இந்த வழக்கினை உடனடியாக விசாரிக்க வேண்டியது இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தார்கள்.

இந்த சமயத்தில், தற்போது அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதி பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்கள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாகவும், வரும் 30ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…

28 minutes ago

கடலூர் ரயில் விபத்து : உண்மை காரணம் என்ன? விசாரணையில் உறுதி செய்யப்பட்ட தகவல்!

கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…

48 minutes ago

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

14 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

14 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

14 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

15 hours ago