பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தண்டனையை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்.
சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே இருசக்கர சொகுசு வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், நீதிபதி ஹெல்மெட் அணியாதது குறித்தும், முகக்கவசம் அணியாதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனையடுத்து, பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் கூறி அவருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது குறித்து தீர்ப்பை கடந்த 20-ம் தேதி வழங்குவதாக இருந்தது.அதன்படி அன்று நீதிபதிகள், பிரசாந்த் பூஷணுக்கு எந்த மாதிரியான தண்டனை வழங்கினாலும், அது பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணைக்குப் பிறகே தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்தனர்.
மேலும், அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷணுக்கு 2 நாள் அவகாசம் அளித்தது.ஆனால் அவகாசம் முடிந்த நிலையில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.இதனையடுத்து பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தண்டனையை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம். வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படுகிறது.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…