டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 3,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. மேலும், கொரோனாவின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
அந்தவகையில், இன்று ஒரே நாளில் 3,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,97,135 ஆக உயர்ந்துள்ளது. இன்று 35,853 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மொத்தமாக அம்மாநிலத்தில் 18,49,263 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,618 ஆக உள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,70,140 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி 22,377 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…