டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 3,788 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 41,437 ஆக உயர்ந்தது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 3,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 70,390 ஆக உயர்ந்துள்ளது. அதில் 26,558 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,124 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 41,437 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,365 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 19,054 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அம்மாநிலத்தில் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 4,20,707 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…