கொரோனா வைரஸ் குறித்த தேவையற்ற வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் பரப்புவோர்களை கைது செய்வதுடன் ஓர் ஆண்டு காலம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என ஹைதராபாத் போலீஸார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.இந்நிலையில் இந்தியாவிலும் பரவி இந்த வைரஸ்க்கு 2 பேர் பலியாலியுள்ளனர்.107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் பாதிப்பைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தெலுங்கானா அரசு மார்ச் 31ந்தேதி தேதிவரை தடை விதித்ததுள்ளது.இதே போல் தமிழ்நாடு,கர்நாடாகம்,கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் அஞ்சானி குமார் எச்சரிக்கையை விடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தெலுங்கானா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆனால், சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாக கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களையும், வதந்திகளையும் மக்கள் மத்தியில் பரப்பி அவர்களை பீதியையும் , அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.இவ்வாறு கொரோனா குறித்த தவறான வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஓர் ஆண்டு கால சிறையும், அபராதமும் விதிக்க முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் கொரோனா குறித்த தவறான தகவல்கள், எச்சரிக்கைகள், அதன் பாதிப்புகள், அதன் பரவல் குறித்து வதந்திகளைப் பரப்பினால் பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 58ன்படி கைது செய்யப்படுவார்கள் என்ற கூடுதல் தகவலையும் தெரிவித்தார்.இதற்கிடையில் அம்மாநில முதல்வர் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் விடுத்த அறிவிப்பில், ” ஊடகங்கள் கொரோனா குறித்த உறுதிப்படுத்தப்படாத எந்தவொரு தகவலையும் உடனடியாக ஏதும் செய்திகள் வெளியிட வேண்டாம் என்றும் மாநில சுகாதாரத்துறை அறிவிக்கும் செய்திகள் மட்டும் செய்தி வெளியிட்டால் போதுமானது. தவறான செய்திகளை வெளியிடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…