கொரோனா வைரஸ் விவகாரம்… பிரதமரின் நிவாரண நிதிக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிதியுதவி…

Published by
Kaliraj
உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று  தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்திய அரசு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ (PM CARES Fund) என்ற பெயரில் ஒரு பொதுத் தொண்டு அறக்கட்டளையை அமைத்துள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் பொதுமக்கள்  தங்களால் இயன்ற அளவு  நிதியை நிவாரணமாக வழங்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, இந்தியாவில் தனி நபர்கள், குழந்தைகளின் சேமிப்பு பணம்,  தனியார் பெரு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், இராணுவ வீரர்கள், விளையாட்டு பிரபலங்கள், திரைதுறையினர்  என  பலர் நிதி வழங்கி வருகின்றனர். இதேபோல், பொதுத்துறையை சேர்ந்த வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் நிதி அளித்துள்ளன. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஊழியர்களும், தங்களது ஒரு நாள் சம்பளமான ரூ.2.5 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளனர்.

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

1 hour ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

2 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago