கோவிஷீல்டு, கோவாக்சன் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியது இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் புனே சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசி ஆகிய 3 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆகவே அவசர கால பயன்பாட்டிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று இது குறித்து இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சோமணி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…