ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு, ஆகஸ்ட் 7இல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன்.!

அவதூறு வழக்கில் சம்மந்தப்பட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தொடர்ந்த அவதூறு வழக்கில், ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 900 கோடி சஞ்சீவனி கடன் கூட்டுறவு சங்க ஊழலில், தன் பெயரை பொய்யாக கூறியதாக மத்திய அமைச்சர் ஷெகாவத், அசோக் கெலாட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
தன்னையும், தன் தாய் மற்றும் தனது குடும்பத்தினரும் இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய அசோக் கெலாட்டுக்கு எதிராக, கடந்த ஏப்ரலில் மத்திய அமைச்சர் ஷெகாவத் வழக்கு தொடர்ந்திருந்தார். கெலாட் தனது தாயை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று பொய்யாக அழைத்ததாகவும், தனது பெயரை கெடுக்கும் விதமாக, அரசியல் லாபம் பெறும் நோக்கத்துடன் கெலாட் இவ்வாறு கூறியுள்ளதாக அவர் மீது ஷெகாவத் குற்றம் சாட்டினார்.
இந்த அவதூறு வழக்கில் ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி ஹர்ஜீத் சிங் ஜஸ்பால், உத்தரவிட்டுள்ளார்.