டெல்லியில் இன்று மட்டும் கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக பதிவாகியுள்ளது.
டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் 2 வது அலை காட்டுத் தீ போல் பரவி தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்தது, இறப்புகளும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க டெல்லி அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா போரில் வெற்றியையும் கண்டுள்ளது கெஜ்ரிவால் அரசு.
தற்போது டெல்லியில் 3 மாதத்திற்கு பிறகு 300 க்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 213 பேர் கொரோனாவால் புதியதாக பாதிப்படைந்தள்ளனர், மேலும் 28 பேர் மட்டுமே டெல்லியில் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24,800 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை மொத்த பாதிப்பு 14,30,884 ஆக உயர்ந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இன்று மட்டும் 497 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 14,02,474 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது டெல்லி கொரோனா வார்டில் 3,610 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், தினசரி பாசிட்டிவ் விகிதம் 0.30% வரை குறைந்துள்ளதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…