இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு உதவுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் சமூக வலைத்தளம் மூலமாக #indianeedsoxygen எனும் ஹேஷ்டேக் மூலம் நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த வருடத்தை விட இந்த வருடம் கொரோனாவின் தாக்கம் அதிக அளவிலேயே காணப்படுகிறது. பாதிப்பு உச்சத்தை தொட்டு வரும் நிலையில், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தினமும் பாதிக்கப்படுவதுடன், ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். மேலும், இந்தியாவில் உள்ள வட மாநிலங்கள் பலவற்றில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனையின் அத்தியாவசிய தேவைகள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்நாட்டு இணையவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எல்லையில் பிரச்சனைகள் இருந்தாலும் அதை கருத்தில் கொள்ளாமல், #indianeedsoxygen எனும் ஹேஷ்டேக்குடன் சமூக வலைத்தளம் மூலமாக கோரிக்கை விடுத்தது வருகின்றனர் பாகிஸ்தான் சொந்தங்கள்.
மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயார் என பாகிஸ்தானில் செயல்படும் அப்துல் சத்தார் தன்னார்வ அமைப்பும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் பாகிஸ்தானியர்கள் நாங்க உங்கள் ரத்த சொந்தம் தான், நாங்கள் உங்களுடன் எப்பொழுதும் துணையாக இருப்போம் எனவும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…