PM Modi [Image source : ANI]
ஒடிசா ரயில் விபத்து காரணமாக பிரதமர் மோடி கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்திலுள்ள பாஹாநகர் சந்தை ரயில் நிலைய பகுதியில் கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவரா நகருக்கு சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (தடம் புரண்டரயில்) மீது மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் , அரசு நிகழ்வுகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, இன்று கலைஞர் பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே போல, தற்போது பிரதமர் மோடி துவங்கி வைக்க இருந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவா – மும்பை இடையே இயங்கும் வகையில் வந்தே பாரத் ரயிலினை இன்று பிரதமர் மோடி டெல்லியில் காணொளி வாயிலாக துவங்கி வைப்பதாக இருந்தது. அந்த நிகழ்வு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…