புதிய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி மத்திய விஸ்டா திட்டத்தை குறித்து உரையாற்றினார்.
இன்று புதுடெல்லியில் பாதுகாப்பு அலுவலக வளாகங்களை திறந்து வைக்கும் போது, ராணுவ அதிகாரிகளுக்கான புதிய அலுவலகங்களை உள்ளடக்கிய மத்திய விஸ்டா திட்டத்தின் எதிர்ப்பாளர்களை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
கஸ்டூர்பா காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்கா அவென்யூவில் அமைந்துள்ள இரண்டு புதிய பல மாடி அலுவலக வளாகங்களின் துவக்க விழாவில்,” மத்திய விஸ்டா திட்டத்திற்குப் பிறகு மக்கள் வசதியாக அமைதியாக இருப்பார்கள்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஆயுதப்படைகளின் 7,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இடமளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பேசிய பிரதமர் மோடி, இந்த புதிய பாதுகாப்பு அலுவலக வளாகங்கள் எங்கள் படைகளின் செயல்பாட்டை மிகவும் வசதியாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்தப் போகிறது. இந்திய தலைநகரில் ஒரு நவீன பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதற்கான மிகப்பெரிய முதல்படி இது.
ஆயுதப் படைகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு அலுவலகங்களாக பணியாற்றிய ரைசினா ஹில்ஸில் உள்ள முந்தைய குடிசைகளுக்குப் பதிலாக புதிய அலுவலக வளாகங்கள் மாற்றப்படும். மேலும், இத்திட்டத்தை குறித்து எதிர்ப்பவர்களை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அதில் அவர் ஆயுதப்படை வீரர்கள் பணிபுரியும் நிலைமைகள் குறித்து, விமர்சிப்பவர்களுக்கு கவலையில்லை என்று குறிப்பிட்டார்.
இன்று, நாம் எளிமையான வாழ்க்கை மற்றும் எளிதாக தொழில் செய்வதில் கவனம் செலுத்தும்போது, நவீன உள்கட்டமைப்பு இதில் சமமான முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய பாராளுமன்ற கட்டிடமும் சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்படும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…