சுனில் அரோரா தலைமையில், 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது குறித்து ஆலோசனை.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கனவே நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இதனை தொடர்ந்து, 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது குறித்து சுனில் அரோரா தலைமையில், டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாடு முழுவதும், கொரோனா அச்சம் இன்னும் விலகாத நிலையில், தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது, பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தல் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…