Categories: இந்தியா

தேர்தல் முடிவுகள் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவாக அமையும்.! சோனியா காந்தி நம்பிக்கை.!

Published by
மணிகண்டன்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினத்துடன் நடைபெற்று முடிந்துள்ளது. நாளை ஒரே கட்டமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நேற்று முன்தினம் (ஜூன் 1) வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்ற உடன், மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. அதில் பெரும்பாலும் ஆளும் பாஜக கட்சி தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என குறிப்பிடபட்டுள்ளது.

இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அனைவரும் பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவதற்கு முற்றிலும் நேர்மாறாக தேர்தல் முடிவுகள் இருக்கும். இந்தியா கூட்டணி வெற்றி பெரும் என நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளோம் என்று கூறினார்.

இன்று கலைஞரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள கலைஞர் நினைவு அரங்கிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வருகை புரிந்து, கலைஞரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் தேர்தல் முடிவுகள் குறித்து தனது கருத்துக்களை கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

2 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

8 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago