#BREAKING: இந்தநாள் அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினம் – லட்சத்தீவு நிர்வாகம் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

லட்சத்தீவு நிர்வாகம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினமாக அறிவித்துள்ளது. 

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினமாக அறிவிக்கப்படுகிறது என்று லட்சத்தீவு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சைக்கிள் தினம் நாளை (ஏப்ரல் 6) முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து லட்சத்தீவு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி நடைபெற்ற 13-வது லட்சத்தீவு மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (எல்பிசிசி) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, லட்சத்தீவு நிர்வாகம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரசு ஊழியர்களுக்கான சைக்கிள் தினமாக அறிவிக்கிறது.

இந்த நாளில் (அதாவது ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை) அனைத்து அதிகாரிகள் / பணியாளர்கள் (மாற்றுத்திறனாளிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் தவிர) பணிக்கு வரும்போது மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடாது. லட்சத்தீவு யூடியின் அனைத்து தீவுகளிலும் சைக்கிள்கள் போன்ற மோட்டார் அல்லாத போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து மத்திய மாநில அரசுகளின் ஊழியர்கள் இப்படி வாரத்தில் ஒருநாள் மிதிவண்டியில் அலுவலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும்? என்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஒழிப்பதற்கு உதவியாக இருக்கும், அதேவேளை ஊழியர்கள் ஆரோக்கியம் நலமாக இருக்கும்! என்று இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு, லட்சத்தீவு நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

18 minutes ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

50 minutes ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

1 hour ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

2 hours ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

2 hours ago

நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…

3 hours ago