Maharashtra Bhiwandi building [Image Source: ANI ]
பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்தது பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பிவாண்டியில் கடந்த சனிக்கிழமையன்று 3 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த கட்டிட விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்றார்கள் பிறகு, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு, கட்டிட இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், கட்டிட உரிமையாளர் இந்திரபால் பாட்டீல் கைது செய்யப்பட்டு தொடர்புடைய ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிவாண்டி டிசிபி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…
லண்டன் : ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…