கர்நாடகா தேர்தலில் தோல்வி..! ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்த முதல்வர் பொம்மை..!

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஓப்படைத்தார்.
கர்நாடக தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் மே 13ம் தேதி அதாவது இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
வெளியான முடிவுகளின்படி, கர்நாடகாவில் காங்கிரஸ் தான் முன்னிலை வகித்த 136 இடங்களிலும், ஆளும் பாஜக முன்னிலை வகித்த 65 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. தற்பொழுது, 136 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில், பாஜக தலைவரும் தற்போதைய முதல்வருமான பசவராஜ் பொம்மை, கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட்-ஐ நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.
மேலும், இன்று காலை வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளபோது முதல்வர் பசவராஜ் பொம்மை தனது தோல்வியை ஒப்புக்கொண்டு 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025