டெல்லியில் 17-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடருகின்ற நிலையில், இந்த போராட்டத்தால், டெல்லி – ஆக்ரா, டெல்லி – நொய்டா உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு முடிவில்லாமல் நடைபெற்று வருகிற நிலையில், பல கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர், இடதுசாரி முன்னணி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், டெல்லியில் 17-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடருகின்ற நிலையில், இந்த போராட்டத்தால், டெல்லி – ஆக்ரா, டெல்லி – நொய்டா உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளது. மேலும், அம்பாலாவில் உள்ள சம்பு, பஸ்தாரா உள்ளிட்ட பல சுங்கச்சாவடிகள் மூடபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டாதால், டெல்லி – ஜெய்பூர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…