சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் சனேஷ் ராம் ரதியா கொரோனா தொற்று காரணமாக இன்று காலை காலமானார்.
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சருமான சனேஷ் ராம் ரதியா உடல்நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை அன்று ராய்கரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணி அளவில் காலமானார்.
இதனிடையே, அவர் வடக்கு சத்தீஸ்கரைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவரான 1977-ஆம் ஆண்டில், அப்போதைய பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசத்தில் உள்ள தரம்ஜெய்கர் தொகுதியில் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒரே தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவரும் ஆவர்.
மத்தியப் பிரதேசத்தில் திக்விஜய் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சராகவும், 2000ல் சத்தீஸ்கர் மாநிலம் தனியே பிரிக்கப்பட்ட பின்னர் அஜித் ஜோகி தலைமையிலான அரசில் உணவுத் துறை அமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியா முழுவதும் உள்ள 650…
சென்னை : இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு காணொலி…
சென்னை : தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் மொத்தமாக எவ்வளவு கோடி இலாபம் ஈட்டியுள்ளது என்பதற்கான விவரத்தை…
டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர்…