கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் மே 19-ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஒடிசாவில் முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுவதால், ஏற்கனவே அங்கு சில நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறையாததால், தற்பொழுது இரவு நேர ஊரடங்கு பிறப்பித்து அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஊரடங்கு குறித்து ஒரிசா அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாளை காலை 5 மணி முதல் வருகிற ஜூன் 1-ஆம் தேதி வரையிலும் ஒடிசாவில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முழு ஊரடங்கு நாட்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார சேவைகள் அனைத்தும் தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்படுவதுடன், நிதி சார்ந்த வங்கிகள், ஏடிஎம் உள்ளிட்டவை தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார நாட்களில் காலை 7 மணி முதல் 11 மணி வரை சாலை ஓரங்களில் உள்ள மளிகை கடைகள், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் கூடிய கடைகள், இறைச்சி மற்றும் பால் விற்பனை செய்ய கூடிய கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
உணவு விடுதிகளில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யலாம் ஆனால் வீட்டிற்கு எடுத்துச் சென்று தான் சாப்பிட வேண்டும் எனவும், கடைகளில் உணவு விநியோகம் செய்யக்கூடிய இ-வர்த்தக உணவு சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வார இறுதி நாட்களாகிய வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு திங்கள்கிழமை காலை 5 மணி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…