Dearness Allowance Hike[File image]
புதுடில்லி:ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியானது தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா,பிடிஐயிடம் பேசுகையில் “ஜூன் 2023க்கான சிபிஐ-ஐடபிள்யூ(CPI-IW) ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. அகவிலைப்படியில் நான்கு சதவீத புள்ளிகள் உயர்த்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எனினும் மத்திய அரசு மூன்று சதவீதம் அகவிலைப்படி வழங்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.அவ்வாறு வழங்கப்பட்டால் அகவிலைப்படி மூன்று சதவீத புள்ளிகள் அதிகரித்து 42 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக அதிகரிக்கும்.
நிதியமைச்சகத்தின் செலவினத் துறை அதன் வருவாய் தாக்கத்துடன் டிஏவை உயர்த்துவதற்கான திட்டத்தை உருவாக்கி, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முன்வைக்கும் என்று மிஸ்ரா கூறினார்.தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…