வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ஜிசாட்-30.. அடுத்தடுத்த சாதனையால் உலகமே உற்றுநோக்கும் தரமான சம்பவம்..

Published by
Kaliraj
  • விண்வெளி துறையில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னிலை அடைந்து வருகிறது.
  • தகவல் தொடர்பு சேவைகளுக்காக இன்று ஒரு செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டது.

இதில் ஒன்றாக, இன்று காலை ஜனவரி  17 துள்ளியமாக கூறினால் அதிகாலை இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட் – 30’ என்ற  செயற்கைக்கோள்,  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் தென் அமெரிக்காவின்  பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ள ஏரியன் விண்வெளி தளத்திலிருந்து  ‘ஜிசாட் – 30’ மற்றும் இடுல்சாட் என்ற விண்வெளி நிறுவனத்தின், ‘இடுல்சாட் கோனக்ட்’ செயற்கைக் கோள்களுடன், ஏரியன் – 5′  என்ற ராக்கெட், சரியாக இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Image result for gsat 30

இதில், 3,357 கிலோ எடையில் அனுப்பப்பட்ட  ஜிசாட் – 30 எனற  செயற்கைக்கோள், தொலைதொடர்பு, வீடு தேடி வரும் தொலைகாட்சி ஒளிபரப்புக்கான ‘டி.டி.எச்., விசாட்’ மற்றும், ‘டிஜிட்டல்’ சேவைகளுக்கு பயன்படும். . இதன், ‘கியூ பேண்டு’ டிரான்ஸ்பாண்டர், இந்தியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளுக்கும், ‘சி பேண்டு’ டிரான்ஸ்பாண்டர், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தொலைதொடர்பு சேவைகளுக்கு இந்த செயற்கை கோள் துணைபுரியும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த ஜிசாட்-30 செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த துள்ளியமான தொழில்நுட்பம் மிகுந்த பலனை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Published by
Kaliraj

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

17 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

56 minutes ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago