வங்கக்கடலில் உருவாகி அதிதீவிரமடைந்த ஆம்பன் புயல், மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கரையை கடந்துள்ளது. இதனால் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
இந்நிலையில், 4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், தற்பொழுது கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் 170 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் கொல்கத்தா, ஹவுரா, உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…