aerial survey [Image Source : Twitter/file image]
பிபார்ஜாய் புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வான்வழி ஆய்வு நடத்த உள்ளார்.
மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவான பிபார்ஜாய் புயல் மிக தீவிர புயலாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து சௌராஷ்டிரா-கட்ச் பகுதியை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரைக்கும், குஜராத்தின் ஜகாவ் துறைமுகத்திற்கும் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 115-125 கிமீ வேகத்தில் வீசியது.
இதில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இரவு சுமார் 524 கிராமங்கள் இருளில் மூழ்கியது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஜூன் 17ஆம் தேதி குஜராத்தின் கட்ச் மற்றும் ஜக்காவ் துறைமுகத்திற்குச் சென்று பிபார்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார்.
கட்ச் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் வான்வழி ஆய்வுக்குப் பிறகு, கட்ச் மாவட்டத்தின் பச்சாவ் மற்றும் மாண்ட்வியில் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்திக்கிறார். முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவர் கூட்டம் நடத்தி நிலைமையை ஆய்வு செய்யவுள்ளார். இதற்கிடையில், வடக்கு குஜராத், கட்ச் மற்றும் சவுராஷ்டிராவில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…