நான் விரைவில் கொன்றுவிடுவேன்.! உ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. காவல்துறை வழக்குப்பதிவு!

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து, லக்னோவில் வழக்குப் பதிவு.
உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி ஒருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவசரகால எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அம்மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
‘112’ என்ற அவசர எண்ணுக்கு மெசேஜ் மூலம் மிரட்டல் வந்தது, அதில், “நான் முதல்வர் யோகியை விரைவில் கொன்றுவிடுவேன்” என்று குற்றச்சாட்டப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளனர். எனவே, கொலை மிரட்டல் விடுத்த அடையாள தெரியாத நபர் மீது லக்னோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை கூறியுள்ளது. அதன்படி, “ஐபிசி பிரிவுகள் 506 மற்றும் 507 மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.