கார் வாங்கும் ஐடியா இருந்தா இதுதான் நேரம்… மே மாதம் ரெனால்ட் அறிவித்த அதிரடி ஆஃபர்.!

Published by
Muthu Kumar

ரெனால்ட் இந்தியா தங்களது குறிப்பிட்ட கார்களுக்கு மே மாதத்திற்கான அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

கார் உற்பத்தி நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தங்களது கார்களில்  புதிய அப்டேட்களுடன் கூடிய மாடல்களை கார் விற்பனை சந்தையில் இறக்குவதுண்டு. அதேபோல் கைவசம் உள்ள பழைய மாடல் கார்களுக்கான விற்பனையில் குறிப்பிட்ட சலுகைகளை அறிவிப்பதும் வாடிக்கையான ஒன்று.

ரெனால்ட் கார் நிருவனம் இந்தியாவில் தங்களது கார் விற்பனையில் நல்ல முன்னேற்றம் அடைந்துவரும் நிலையில் அந்நிறுவனம் புதுப்புது மாடல்களில் கார்களை இந்தியாவில் களமிறக்கி வருகிறது. அதன்படி குறைந்த விலை பட்ஜெட் கார் முதல் அதிக இடவசதியுள்ள கார் வரை அனைத்து விதங்களிலும் பல்வேறு ரக கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தங்களது குறிப்பிட்ட ரக  தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு மே மாத சலுகையாக அதிகபட்சமாக ரூ.62,000 வரை அறிவித்துள்ளது. அதன்படி ரெனால்ட் ட்ரைபர், ரெனால்ட் கிகர், மற்றும் ரெனால்ட் க்விட் கார்களுக்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மாடல்கள் மற்றும் டீலர்ஷிப் ஸ்டோர்களைப் பொறுத்து இந்த சலுகை மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளது.

ரெனால்ட் ட்ரைபர்(Triber):

ஏழு இருக்கைகள் கொண்ட (MUV) அதிகபட்சமாக 62,000 ரூபாய் வரை சலுகை பெறலாம். இந்தச் சலுகை ரூ.25,000 ரொக்கத் தள்ளுபடியாகவும், ₹25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.12,000 கார்ப்பரேட் ஊழியர்களுக்கான தள்ளுபடியாகவும் கிடைக்கிறது.

கூடுதலாக, ரெனால்ட் ட்ரைபரின் 2022 மாடலில் வாங்குபவர்கள் ரூ.10,000 மதிப்புள்ள கூடுதல் பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்கிராப்பேஜ்(scrappage) திட்டத்தின் (பழைய வாகனங்களை ஸ்கிராப்பிற்கு அனுப்பும்) கீழ் ரூ.10,000 கூடுதல் தள்ளுபடியாகவும் கிடைக்கிறது.

ரெனால்ட் கிகர்(Kiger):

Renault Kiger இன் 2022 மற்றும் 2023 மாடல்கள் 62,000 ரூபாய் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகைகள் ரூ.25,000 ரொக்க தள்ளுபடி, ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் ரூ.12,000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் கிடைக்கிறது. மேலும் ஸ்கிராப்பேஜ் திட்டத்தின் கீழ் வாங்குபவர்கள் ரூ.10,000 கூடுதலாகப் பெறலாம்.

ரெனால்ட் க்விட்(Kwid):

2022 மாடலில் அதிகபட்சமாக 57,000 ரூபாய் சலுகையாகப் பெறலாம். இதில் ரூ.25,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.12,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். Kwidல் ரூ.10,000 கூடுதல் பலன்களும் கிடைக்கிறது.

Published by
Muthu Kumar

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

27 minutes ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

1 hour ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

2 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

2 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

3 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

4 hours ago