RBI FY23 Annual Report! [Image Source : The Economic Times]
ரூ.4.55 கோடி மதிப்பிலான 91,110 ரூபாய் 500 நோட்டுகளை கண்டறிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தகவல்.
2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவில் போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 14.4% அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி மற்றும் மற்ற வங்கிகள் ரூ.3.98 கோடி மதிப்பிலான 79,669 கள்ள நோட்டுகளில் இருந்து, ரூ.4.55 கோடி மதிப்பிலான 91,110 ரூபாய் 500 நோட்டுகளை கண்டறிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டில், வங்கித் துறையில் கண்டறியப்பட்ட மொத்த போலி இந்திய ரூபாய் நோட்டுகளில் (எஃப்ஐசிஎன்) 4.6 சதவீதம் ரிசர்வ் வங்கியிலும், 95.4 சதவீதம் மற்ற வங்கிகளிலும் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரூ.20 மற்றும் ரூ.500 (புதிய வடிவமைப்பு) மதிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட போலி நோட்டுகளில் முறையே 8.4 சதவீதம் மற்றும் 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுபோன்று, ரூ.10, ரூ.100 மற்றும் ரூ.2000 மதிப்பிலான போலி நோட்டுகள் முறையே 11.6 சதவீதம், 14.7 சதவீதம் மற்றும் 27.9 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கிடையில், 2021-22ல் நிதியாண்டின் முறையே 9.9% மற்றும் 5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2022-23-ல் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மற்றும் அளவு முறையே 7.8 சதவீதம் மற்றும் 4.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மதிப்பு அடிப்படையில், ரூ.500 மற்றும் ரூ.2000 வங்கி நோட்டுகளின் பங்கு, மார்ச் 31, 2022-இல் இருந்த 87.1 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2023 மார்ச் 31 அன்று புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 87.9 சதவீதமாக இருந்துள்ளது. அளவு அடிப்படையில், ரூ.500 மதிப்பிலான மதிப்பு 37.9 சதவீதமாக இருந்தது, அதைத் தொடர்ந்து ரூ.10 ரூபாய் நோட்டுகள் மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 19.2% ஆக இருந்தன என்றுள்ளனர்.
உக்ரைன் : ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இன்று (ஜூலை 15) தனது…
லண்டன் : கடைசி நாள் வரை நீடித்த லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி நேற்று வயது மூப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது உயிருக்கு ஆபத்து…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர்களில் ஒருவரான கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு…
கலிப்போர்னியா : கலிப்போர்னியா மாகாணம் சாண்டியாகோ கடலில் பாராசூட் உதவியுடன் டிராகன் விண்கலம் பத்திரமாக இறக்கப்பட்டது. கடலில் இறங்கியவுடன், ஸ்பேஸ்எக்ஸ்…