தொடர் போர் பதற்றம்.., உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் ராஜினாமா.!

உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வழங்கினார்.

Denys Shmyhal - zelensky

உக்ரைன் : ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இன்று (ஜூலை 15) தனது பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார். இது உக்ரைன் அரசாங்கத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்களின் ஒரு பகுதியாகும். 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

ஷிம்ஹாலின் ராஜினாமா குறித்து உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பு உக்ரைன் நாடாளுமன்றத்திற்கு (Verkhovna Rada) அனுப்பப்பட்டு, அங்கு புதிய பிரதமர் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

உக்ரைன் அரசியல் அமைப்பின்படி, பிரதமரின் ராஜினாமாவை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும், மேலும் புதிய பிரதமரை நியமிக்க ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அவசியம். இதனிடையே, உக்ரைனின் துணைப் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோவை புதிய பிரதமராக ஜெலென்ஸ்கி பரிந்துரைத்தார். இந்த மாற்றங்கள் குறித்து உக்ரைன் நாடாளுமன்றம் விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெனிஸ் ஷிம்ஹால் யார்?

டெனிஸ் ஷிம்ஹால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உக்ரைனின் பிரதமராகப் பணியாற்றி வருகிறார். அவர் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் கீழ் பணியாற்றிய முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர். ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு (2022) தொடங்கியபோது, நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் ஷிம்ஹால் முக்கிய பங்கு வகித்தார். அவரது தலைமையில், உக்ரைன் பல சர்வதேச நிதி உதவிகளையும், இராணுவ ஆதரவையும் பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்