இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி.!

லண்டனில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுடன் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Team India

லண்டன் : கடைசி நாள் வரை நீடித்த லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இதற்கு அடுத்த நாளான இன்று, இந்திய அணி இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை சந்திக்கச் சென்றது.

மேலும், இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள நிலையில், இந்திய மகளிர் அணியும் மன்னர் சார்லஸை சந்தித்தது. லண்டனில் உள்ள செயிண்ட் ஜேம்ஸில் மன்னர் சார்லஸ் உடன் இரு அணிகளுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

இந்த சந்திப்பின்போது, இந்திய கேப்டன் சுப்மான் கில், துணை கேப்டன் ரிஷப் பந்த், பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் இங்கு இருந்தனர். இரு இந்திய அணிகளும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளன.

ஷுப்மான் கில் தலைமையிலான ஆண்கள் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான பெண்கள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது. அதன்படி, இதில் இங்கிலாந்து ஆண்கள் மூன்று போட்டிகளுக்குப் பிறகு 2-1 என முன்னிலை வகிக்கிறது. மறுபுறம், இந்திய பெண்கள் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என வென்றது.

இப்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 16 முதல் தொடங்க உள்ளது. மறுபுறம், இந்தியா-இங்கிலாந்து ஆண்கள் அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் ஜூலை 23 முதல் மான்செஸ்டரில் நநடைபெறும், தொடரின் கடைசி போட்டி ஜூலை 31 முதல் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்