இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,934 பேருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைளை பொதுமக்கள்கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 6,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 6,904 ஆக குறைந்திருந்த கொரோனா தொற்று இன்று 6,934 ஆக சற்று அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 65,683 லிருந்து 63,380 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், பலி எண்ணிக்கை 5,31,345 லிருந்து 5,31,369 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,48,98,893 லிருந்து 4,43,11,078 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 220,66,44,679 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 4,943 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…