தலைநகர் புது டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்டஉதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக , இந்தியா மற்றும் பிரேசில் நாட்டிற்க்கு இடையே கையெழுத்தாக உள்ள ஒப்பந்தத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில், இரு நாடுகளுக்கிடையேயான குற்றங்கள், தீவிரவாதத்துடனான தொடர்புகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குதல் போன்ற விஷயங்களில் பிரேசில் நாட்டுடன் குற்றங்கள் தொடர்பான புலன் விசாரணையில் இருதரப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்கு இது உதவும் இந்த ஒப்பந்தம் என்றும், மேலும், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் போல்செனாரோ பங்கேற்க உள்ளநிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கும், பிரேசில் நாட்டின் குடியுரிமை அமைச்சகத்திற்கும் இடையே, மழலைப் பருவ துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்காக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்த்ஹங்களின் மூலம் இருதரப்பு உறவு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…