மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாநிலங்களவையில் ‘கிழக்கு லடாக்கின் தற்போதைய நிலைமை’ குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.
இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்ற நிலையில், லடாக் எல்லையில் பாங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் இந்தியா மற்றும் சீனா இருதரப்புக்கும் இடையே பதற்றம் நிலவியது.இந்த பகுதிகளில் இரு தரப்பும் ராணுவ வீரர்களை தொடர்ச்சியாக குவித்து வந்தனர்.கிழக்கு லடாக்கின் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக சீனா – இந்தியா இடையே 9-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் , வீரர்கள் மற்றும் தளவாடங்களை திரும்பப்பெற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில் ‘கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை’ குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…